நோர்வேயின் FK Haugesund உதைப் பந்தாட்ட கழகத்தின் முதன்மை பயிற்சியாளராக ஈழத் தமிழர்.

191 0

டென்மார்கில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழரான சஞ்சீவ் (சண்) மனோகரன் அவர்கள் நோர்வேயின் முதல்த்தர வரிசையில் (Eliteserien) விளையாடும் கழக்கங்களில் ஒன்றான FK Haugesund உதைப் பந்தாட்ட கழகத்தின் தற்காலிய முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு 10.01.2022முதல் இக் கழகத்தின் Development Academy தலைவராக பணியாற்றி வந்த சண் அவர்கள், அதற்க்கு முன் பத்தாண்டுகளுக்கு மேலாக டென்மார்கின் உயர்தர வரிசையில் (Super Liga) விளையாடும் உதைப் பந்தாட்டக் கழகமான AGF விளையாட்டுக் கழகத்தில் U10 தொடக்கம் U19 வரையான இளையோர் அணி பயிற்றுனராக கடமையாற்றியிருந்தார்.

கடந்த 10 திகதி தனது புதிய பதவியை ஏற்றுள்ள சண் அவர்கள், ஐரோப்பா நாடுளின் முதல்தர வரிசையில் விளையாடும் கழகங்களின் முதலாவது ஈழத் தமிழ் பயிற்றுனராவர். அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணாவின் மகள்வழி பேரனான இவர், UEFA Elite Youth A license சான்று தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதோடு, கடந்த பல ஆண்டுகளகா டென்மார்க் AGF கழகத்தில் இளையோர் வளர்ச்சி பிரிவிலும் கடமையாற்றியுள்ளார்.