“பணமிருந்தால் எந்தவொரு சமூக விரோதியும் அரசியலுக்கு வர முடியும்”

374 0

பணமிருந்தால் எந்தவொரு சமூக விரோதியும் அரசியலுக்கு வர முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்தியது 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பே ஆகும் எனக் குற்றஞ்சாட்டிய ஜனாதிதி மைத்திரிபால சிறிசேன, ஒரு நாட்டின் வரலாற்றை அழிப்பது மன்னிக்க முடியாத குற்றமென்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு, மருதானை டார்லி வீதியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணியினால் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கல்வி பயிலும் கலாசாலையின்  ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்