மவுசாகலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு

125 0
கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் பெய்துவரும் கன மழையால் மவுசாகல நீர்த் தேக்கத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்து காணப்படுகிறது.

135 அடி நீர் கொள்ளளவை கொண்ட இந்த நீர்த் தேக்கம் இன்று சனிக்கிழமை (09) பகல் வேளையில் 116 அடி வரையில் நீர் நிறைந்துள்ளது.

இந்த நீர் மட்டமானது நீர்த் தேக்கத்தின் கொள்ளளவை விட 19 அடி மட்டுமே குறைவாக உள்ளது; இன்னும் 19 அடிக்கு நீர் நிரம்பும் பட்சத்தில் நீர்த் தேக்கம் அதன் கொள்ளளவை எட்டிவிடும் என்று நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.