இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.
சனல் 4 தெரிவித்துள்ள விடயங்களை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு உண்மை நீதி மற்றும் தேசத்தின் நலன் ஆகியவற்றிற்கான தனது அர்ப்பணிப்பையும் வலியுறுத்தியுள்ளது.
கருத்துசுதந்திரம் புலனாய்வு செய்தியறிக்கையிடல் ஆகியவற்றிற்கான சுதந்திரத்தை மதிப்பதாக தெரிவித்துள்ள இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு ஆதாரமற்ற தீங்கிழைக்கும் மற்றும் ஆவணப்படத்தில் கூறப்பட்ட மோசமான ஆதாரபூர்வமற்ற கூற்றுக்களால் ஏற்படும் விளைவுகளிற்கு சனல்4 பொறுப்பேற்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
சனல் 4 இன் ஆவணப்படம் இலங்கையின் சமூக கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

