ஜெர்மனியில்100 வயதான மூதாட்டியை கோடரியால் வெட்டிக் கொலை செய்த ஜெர்மானியர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்தத வழக்கு ஜெர்மனியிலுள்ள ஹாம்பர்க் நகரில் இன்று(08.09.2023) விசாரணைக்கு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
37 வயதான நபர் ஹாம்பர்க் நகரில் வாழ்ந்து வந்த தனது 100 வயது பாட்டியை கவனித்துவந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு மூதாட்டியை கவனித்துக்கொள்வது மிகவும் கடினமாக இருந்துள்ளது.
மறதி பிரச்சினையால் அவதியுற்ற 100 வயது மூதாட்டி சக்கர நாற்காலி உதவியுடனே நடமாடிவந்துள்ளார்.
திடீரென மூதாட்டியை பேரன் தாக்க, தடுக்க முயன்ற அந்த மூதாட்டி சக்கர நாற்காலியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
இதன் போது குறித்த நபர் மூதாட்டியின் தலையிலும்,கழுத்திலும் கோடாரியால் 16 வெட்டுக்கள் வெட்டி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு பொலிஸில் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

