சம்பந்தன் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் – வடக்கு கிழக்கு போராட்டங்களும் தொடர்கின்றன.

275 0

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களால் திருகோணமலையில் அமைந்துள்ள எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தனின் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்று மாலை நடத்தப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளால் கடந்த பதினைந்து நாட்களாக கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக தொடர் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவந்தது.

எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் திருகோணமலையில் அமைந்துள்ள தனது இல்லத்திற்கு சென்றுள்ள நிலையில் இந்த போராட்டம் நடத்தப்படுள்ளது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

குரல் மக்கள்


இதேவேளை, கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று பத்தொன்பதாவது நாளாளகவும் தொடர்கின்றது.

138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மக்கள் இடம்பெயர்ந்து சென்ற நிலையில் இராணுவத்தினர் மக்களின் சொந்த நிலங்களில் நிலைகொண்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் தீர்வுகள் எதுவும் கிடைக்காத நிலையில் தொடர்கின்றது.

இந்த நிலையில் இன்றையதினம் முல்லைத்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

குரல் சிவி


இதேவேளை, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்படும் போராட்டம் இன்று 28வது நாளாகவும் தொடர்கின்றது.

இதேவேளை, முல்லைத்தீவில் கடந்த எட்டாம் திகதி முதல் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்றும் தொடர்ந்தது.

இதனிடையே, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி தொழிலற்ற பட்டதாரிகளால் மேற்கொள்ளப்படும் தொடர் போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.