வருடாந்தம் 80,000 பேர் வரை விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்

46 0
ஒவ்வொரு ஆண்டும் 80,000 பேர் வரை விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தேசிய தகவல் நிலையத்தின் தலைவர் டொக்டர் ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தேசிய விஷத் தடுப்பு வாரத்திற்காக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.கடந்த இரண்டு தசாப்தங்களில், இந்த நாட்டில் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரண்டு சதவீதம் பேர் தவறுதலாக விஷம் குடிகின்றனர் . பெரும்பாலான சம்பவங்கள் கள் வீட்டில் நிகழ்கின்றன
மேலும், போதைப்பொருள் விஷமாவதன் காரணமாக அதிகளவானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர் , இது முப்பத்தொரு வீதமாக உள்ளது என தேசிய தகவல் மையம் தெரிவித்துள்ளது.குருநாகல் மாவட்டம் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் இருந்து அதிகமான சம்பவங்கள் பதிவாகின்றன . மேலும் விஷம் குடித்து உயிரிழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சிறு குழந்தைகள் என்றும், அளவுக்கு அதிகமாக மருந்துகளை கொடுப்பதாலும் அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன என்றும் நிபுணர் மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.