நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக சிலர் தெரிவித்து வரும் கருத்துக்கள் தவறானது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
பியகம மல்வானை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். எனினும் அப்படியான நிலைமை இல்லை.
மகிந்த ராஜபக்ச ஒன்று தன்னிடம் இருந்து இல்லாமல் போயுள்ளதால் ஆங்காங்கே ஒவ்வொரு கதைகளை கூறி வருகிறார்.வடக்கின் அரசியல் தலைவர்கள் கூறும் விடயங்கள் நாட்டில் நடக்காது. வெளிநாட்டு நீதிபதிகள் எமக்கு அவசியமில்லை.பொலிஸார் சட்டம், ஒழுங்களை பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் எனவும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

