யாழில் கரவெட்டி பகுதியில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு

374 0
யாழ். குடாநாட்டில் டெங்கின் தாக்கம் யாழ்.நகர் மற்றும் உடுவிலை அண்டிய பகுதிகளில் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் கரவெட்டிப்பகுதியில் தற்போதும் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளதாகவே மாவட்ட சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவுக்கின்றன.
யாழ். குடாநாட்டில் இந்த ஆண்டில் அதிகரித்துள்ள டெங்கு மற்றும் பண்டிக்காய்சல்கள் இதுவரை முழுமையாக கண்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படாதபோதிலும் ஒரு சால பிரதேசத்தில் காணப்பட்ட அதிகரித்த தன்மை தற்போது குறைவடைந்துள்ளது. இருப்பினும் வடமராட்சிப் பகுதிகளான கரவெட்டி , பருத்தித்துறை பகுதிகளில்ஙதிகரித்தே கானப்படுகின்றன.
இதேவேளை இந்த மாத்த்தின் முதல் 15 நாட்களிலும் 244பேர் டெங்கு நோய்த்தாக்கத்திற்கு இனம்காணப்பட்டுள்ளதோடு இந்த ஆண்டு முழுவமும் இதுவரையில்ல 1324 டெங்கு நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர் . இதே நேரம் குடாநாட்டில் கானப்படும் பண்டிக்காச்சல் எனப்படும் எச்1.  என் 1 இன்புளுவன்சாவின்   காய்ச்சலும் தற்போதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இவற்றினை கட்டுப்படுத்துவதற்கான பணிகளும் இடம்பெறுகின்றன. எனத் தெரிவிக்கப்பட்டது.