வவுனியா மாவட்ட எல்லைக்கிராமங்களை பாதுகாக்க சகலரும் முன்வரவேண்டும், மக்கள் கோரிக்கை

264 0
வவுனியா மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளை அண்டிய கிராமங்களான ஊஞ்சல்கட்டி , மருதோடை கிராமங்களை அழிவில் இருந்து பாதுகாக்க சகலரும் முன் வரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில் ,
வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கிராமங்களான மருதோடை , ஊஞ்சல்கட்டி போன்ற கிராமங்களில் 1990ம் ஆண்டுகளிலேயே அதிக மக்கள் வாழ்ந்த கிராமங்கள் அன்று ஊஞ்சல்கட்டியில் மட்டும் 326 குடும்பங்களும் மருதோடையில் 400குடும்பங்களும் வாழ்ந்தனர். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பல பிரதேசங்களிலும் சிதறி வாழ்ந்து இன்று யுத்தம் நிறைவுற்று 8 ஆண்டுகளாகின்றபோதும் இப் பகுதிகளில் மீள் குடியமர இக் கிராம மக்கள் அச்சத்துடனேயே வாழ்கின்றோம்.
இதன் காரணமாகவே எமது உறவுகள் கிராமத்திற்கு திரும்பி வர மறுக்கின்றனர். அதாவது எமது பூர்வீக கிராமங்களான இவ்விரு கிராமங்களிற்கும் இடையில் செல்லும் நெடுங்கேணி – வெடிவைத்தகுளம் வீதிக்கு தார் இட்டு இன்று சுமார் 20 வருடங்கள் ஆகின்றன. இதனால் இந்த 17 கிலோமீற்றர் வீதியும் மிகவும் சேதமடைந்தே கானப்படுகின்றது. அது மட்டுமல்ல இரவு என்றால் யாணைகளின் நடமாட்டம் ஒருபுறம் போதிய தொழில் வாய்ப்புக்கள் கிடையாது தோட்டச் செஞ்கைக்கான நிலமும் நீர் வளமும் உள்ளபோதிலும் பயிர்ச் செய்கையில் ஈடுபடமுடியாத நிலமை. அதனையும் எதிர்கொண்டு பயிரிட்டால் அறுவடைக் காலத்திற்கு அண்மையில் யாணைகள் வந்து அழிக்கின்றன.இதனால் வருமானமும் இன்றி போட்ட முதலும் அழிவடைகின்றது.
இதன்காரணமாகவே 326 குடும்பங்கள் வாழ்ந்த ஊஞ்சல்கட்டி கிராமத்தில் இன்று வெறும் 30 குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். ஆனால் எமக்கு அண்மையில் உள்ள வேறு இணத்தவர்கள் 83 மற்றும் 90களில் 200குடும்பங்களாக வெளியேறியவர்கள் இன்று ஆயிரம் குடும்பமாக திரும்புகின்றபோது நாம் வாழ.ந்த 326 குடும்பங்களில் 30 குடும்பங்கள் மட்டுமே திரும்பியுள்ளோம். இந்த நிலையில் எவ்வாறு தாயக பூமிகளை பேனிப் பாதுகாக்க முடியும் . ஊஞ்ல்கட்டியின் நிலை இதுவென்றால் அங்கால் மருதோடையில் வாழ்ந்த 400 குடும்பங்களில் இன்று வெறும் 86 குடும்பங்கள் மட்டுமே சொந்த இடம் திரும்பியுள்ளனர்.
இவ்வாறு சொற்ப எண்ணிக்கையில் சொந்த இடம் திரும்பியவர்களிற்குகூட அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ எந்தவிதமான அடிப்படை வசதிகளோ வாழ.வாதார ஏற்பாடுகளையோ பூர்த்தி செய்யவில்லை. உதாரணமாக கூறுவதானால் யாணைகளின் தாக்கம் உள்ள இப்பகுதிகளில் இன்னும் பல வீடுகளிற்கு மின்சாரம் கிடையாது ஊஞ்சல்கட்டியில் 30 குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றோம் அதில் 9 குடும்பத்திற்கு மின்சாரம் கிடையாது. அதே போன்று 8 குடும்பங்களிற்கு நிரந்தர வீடுகள் கிடையாது. இந்தக் ஆண்டுகளாக மீள்குடியேறிய எமக்கே இவை கிடைக்காதபோது எஞ்சிய எமது உறவுகளை இங்கு குடியமர வருமாறு நாம் எவ்வாறு அழைக்க முடியும்.
ஊஞ்சல்கட்டிக் கிராமத்தினகப் போன்றே மருதோடைக் கிராம்மும் உள்ளது. அங்கு வாழும் 86 குடும்பங்களில் 65 குடும்பங்களிற்கு மட்டுமே நிரந்தர வீட்டு வசதிகள் உண்டு எஞ்சிய குடும்பங்களிற்கு வீட்டு வசதிகள் கிடையாது . அதேபோன்று இங்கு வாழும் 14 குடும்பங்களிற்கு இன்றுவரையில் மின்சாரமும் கிடையாது. வாழ்வாதாரத்திற்கு போதிய வயல்நிலங்களும் குளங்களும் உள்ளபோதிலும் விவசாயம் மேற்கொள்ளமுடியாதவாறு யானைகளின் தொல்லை பெரிய பிரச்சணையாகவே உள்ளது.
யானை தொடர்பில் கடந்த 5 ஆண்டுகளாக முறையிடாத அதிகாரிகளே கிடையாது யாணைக்கு வேலி போட்டுத் தருவதாக பல தடவை வாக்குறுதிகள் மட்டும் வழங்கப்பட்டன இருப்பினும் பணிகள் மட்டும் இடம்பெறவே இல்லை. நிலமைகள் இவ்வாறு இருந்து எல்லைக் கிராமத்தினை பாதுகாக்க நாம் போராடிவருவதனை கண்டிகொள்ளாத அரசியல்வாதிகளும் இல்லாத குடும்பங்களிற்காக ஜெனிவா வரையில் சென்று குரல் கொடுப்பதாக கூறுகின்றனர்.
இல்லாத உறவுகளும் எமது சொந்தங்களாகவுள்ளபோதிலும் இல்லாத ஊருக்கு வழிதேடுவதோடு உங்கள் கண்முண்ணால் எல்லைக் கிராமங்களில் வாடி வதங்கி வாழ வழியும் இன்றி யாணைகளின் மத்தியிலும் எல்லைக்கப்பால் வேற்று மொழி இனத்தவர்கள் மத்தியிலும் அச்சத்தில் வாழும் எம் தொடர்பிலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் எமது உறவுகளிற்கு எடுத்துக்கூறி எம்போன்றவர்களிற்கு உதவ முன்வரவேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கின்றனர்.