ஜேர்மனியில் நகரம் ஒன்றில் உக்ரைனிய மொழி பேசியதற்காக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 10 வயதுடைய உக்ரைனிய சிறுவனை பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசியுள்ளார்.
ஜேர்மனியின் ஐன்பெக் நகரில் உள்ள பாலம் ஒன்றில் சில உக்ரைனிய சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்த போது அவர்கள் உக்ரைனிய மொழியில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
அத்துடன் அந்த அடையாளம் தெரியாத நபர் சிறுவர்களை ரஷ்ய மொழியில் பேசுமாறு உத்தரவிட்டுள்ளார், மேலும் உக்ரைன் தான் போரை தொடங்கியதாகவும் சிறுவர்களிடம் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் அலுவலகத்தின் தகவல் படி, அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்த 10 வயது சிறுவன் ஒருவனை கால்வாய் குறுக்கே அமைக்கப்பட்டு இருந்த பாலத்தில் இருந்து தூக்கி வீசினார்.
இதில் சிறுவனின் தலை மற்றும் இடது கால் பகுதி பாலத்தில் இருந்த இரும்பு கம்பி மீது மோதி பலத்த காயமடைந்தது. மேலும் கால்வாயில் விழுந்து கிடந்த சிறுவன் மீது கண்ணாடி பாட்டில்களையும் அந்த நபர் தூக்கி எறிந்துள்ளார்.
இதனால் சிறுவனின் வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத நபர் சம்பவ இடத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார்.
உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.ஆகஸ்ட் 26ம் திகதி நடைபெற்ற தாக்குதல் அரசியல் உள்நோக்கம் கொண்டது, பொலிஸார் சம்பந்தப்பட்ட நபரை தேடி வருவதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

