ஆதித்யா விண்கலம் திட்ட இயக்குநர் நிகர் சாஜி – அரசுப் பள்ளியில் படித்து உயர்ந்த நிலையை அடைந்தவர்

135 0

சந்திரயான்-1 திட்டத்தில் மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-2 திட்டத்தில் வனிதா, சந்திரயான்-3 திட்டத்தில் வீரமுத்துவேல், மங்கள்யான் திட்டத்தில் அருணன் சுப்பையா ஆகியோர் திட்ட இயக்குநர்களாக இருந்து திறம்படச் செயலாற்றினர்.

தமிழகத்தைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகளின் வரிசையில், ஆதித்யா-1 திட்ட இயக்குநர் நிகர் சாஜியும் இணைந்துள்ளார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ஷேக் மீரான்- சைதுன் பீவீ தம்பதியின் 3-வது மகள் நிகர் சாஜி. இவரது சகோதரர் ஷேக் சலீம், சென்னை ஐஐடி-ல் முனைவர் பட்டம் பெற்றவர். பெங்களூருவில் விஞ்ஞானியாகவும், ஆழ்வார்க்குறிச்சி கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.செங்கோட்டையில் வசித்துவரும் ஷேக் சலீம் கூறியதாவது: எனது தந்தை அந்தக் காலத்திலேயே பி.ஏ. ஹானர்ஸ் படித்தவர். நானும், எனது சகோதரிகளும் அரசுப் பள்ளியில்தான் படித்தோம்.