நான் மக்களுக்காகவே பேசுகிறேன் – என் வாயை யாராலும் மூட முடியாது!

42 0

எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கும் போது தேவையற்ற கேள்விகளை கேட்டு பாராளுமன்றத்தில் நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதாக மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற குழு ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக இரு அரச பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவ்வாறானதொரு கருத்து வெளியிடப்பட்டிருந்தால் அது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும்,மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கடமையை சரியாகச் செய்வதை ஏற்றுக்கொண்டமையே மகிழ்ச்சிக்குக் காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொள்கை திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் துறையில் பல ஆண்டுகளாக அநீதி இழைக்கப்பட்ட அதிகாரிகள் குழுவுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மக்கள் பிரச்சினைகளை சட்டவாக்கத்துறையில் முன்வைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதையே தாம் செய்வதாகவும், மக்களின் பணத்தில் சம்பளம் மற்றும் சேவை வசதிகள் மற்றும் பல்வேறு சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களைப் பெறும் மக்கள் பிரதிநிதிகளின் பணி இதுவாகவே இருக்க வேண்டும் என்றும்,தாம் தனிப்பட்ட கேள்விகளைக் கேட்கவில்லை என்றும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தான் எப்போதும் முன்வைப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

மக்கள் பணத்தால் நிர்வகிக்கப்படும் மக்கள் பிரதிநிதியாக,மக்களுக்காக குரல் எழுப்புவது தனது கடமை என்றும்,அதனை தடுக்க ஜனாதிபதிக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ அல்லது தரப்புக்கு முடியாது எனவும்,அதனை நிறுத்த இடமளிக்க மாட்டேன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

திட்டமிடல் துறையில் உயர் தரம் 2 (2) வகைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் போது சேவை சாசனத்தை மீறி,வர்த்தமானி வெளியிட்டதும்,ஆட்சேர்ப்புச் செய்யும் போது வர்த்தமானியில் பெயர் இல்லாத குறிப்பிட்ட பிரிவினருக்கு நியமனம் வழங்கி,வேறு பிரிவினருக்கு நியமனம் வழங்காமல் விட்டும் ஆட்சேர்ப்பில் இடம் பெற்ற அநீதிகள் குறித்தும் இங்கு சமூகமளித்த தரப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரியப்படுத்தினர். இந்த அநீதி தொடர்பில் விரைவில் பாராளுமன்றத்தில் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.