தென்னாபிரிக்க தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 75 ஆக அதிகரிப்பு

56 0

தென்னாபிரிக்காவின் ஜொகானஸ்பேர்க்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.

ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் பலர் தீயிலிருந்து தப்புவதற்காக கட்டிடத்திலிருந்து பாய்ந்தவேளை  காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பல உடல்கள் முற்றாக எரிந்துபோயுள்ளதால் அவற்றை அடையாளம் காணமுடியாத நிலை காணப்படுகின்றது என தென்னாபிரிக்க ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கட்டிடத்திலிருந்து வெளியாகும் உடல்கள் அடையாளம் காணப்பட முடியாதவையாக காணப்படுகின்றன என தெரிவித்துள்ள அந்த ஊடகம் தீயினால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் உடல்களாக அவையிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

அனுமதியளிக்கப்படாத குடியிருப்பொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தொடர்மாடி கைவிடப்பட்ட ஒன்று என்ற போதிலும் குளிர்காலத்தில் வீடற்றவர்கள் இங்கு குடியேறினர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 

இதன் காரணமாக அந்த கட்டிடம் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை அதனால் மீட்பு நடவடிக்கைகள் கடினமானவையாக உள்ளன எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்

அதிகளவு குடியேற்றவாசிகள் வசிக்கும் பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.