அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

82 0

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சரினால் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாவிட்டால், அவர் தொடர்ந்தும் பதவியில் இருந்தும் பயனில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நாட்டில் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல குறிப்பிட்டுள்ளார்.