கிளிநொச்சியில் நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை

371 0
நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தை கிளிநொச்சியில் மேற்கொள்ளும் வகையில்  அரச  உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தும்  நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது.
இன்று காலை கிளிநொச்சி இரணைமடு தாமரை தடாகம் மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அரமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற  நிகழ்வில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
 மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அலுவலர்களிடம் மக்கள் செல்வதற்கு பதிலாக அதிகாரிகள் மக்களிடம் வந்து பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு முதலாவது சேவை பொலனறுவை மாவட்டத்திலும் இரண்டாவது காலி மாவட்டத்திலும் நடைப்பெற்ற இந்நிகழச்சித்திட்டம் மூன்றாவதாக 2017 இல் கிளிநொச்சியில் இடம்பெறுகிறது.
இ;ந்த மக்கள் சேவை நடமாடும் நிகழ்ச்சி மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் நான்கு நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை இடம்பெற்று இறுதி நிகழ்வும் நடைபெறும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொது மக்கள் அடையாள அட்டை,பிறப்பு விவாக,மரணச் சான்றிதழ்கள், சாரதி அனுமதி பத்திரம். ஒய்வூதிய திணைக்கள சேவைகள், வீட்டுக் கடன் பெற்றுக்கொள்ளல், முதியோர் அட்டைகள் பெற்றுக்கொள்ளல், காணி உரிமம், வேலைவாய்ப்பு, சமூர்த்தி ஓய்வூதிய கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை நிகழச்சி திட்டத்தை ஆரம்பிக்கும் முகமாக நடைப்பெற்ற இன்றைய கருத்தரங்கில்  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராஜா, சரவணபவன், மஸ்தான், சிறிதரன், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிபொலீஸ்மா அதிபர் மகேஸ்வெலிகன்ன மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான அரியரட்னம்,தவநாதன்,  வடமாகாண ஆளுநரின் செயலாளர்,முதலமைச்சரின் செயலாளர், முல்லைத்தீவு அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள்,  உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்க்ள கலந்துகொண்டனர்.