நினைவுத்தூபியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிக்கு ஊடகவியலாளர்கள் கடும் கண்டனம்

66 0

மட்டக்களப்பில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலளார்கள் நினைவுத்தூபியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு தலைவிக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிக்கு ஊடகவியலாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பில் கவனஈர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.இந்த போராட்டம் நடைபெறும் பகுதிகளில் இன்று நமக்கான டொலரை பெற பேரணியில் கலந்துகொள்ள வாருங்கள் என்ற சுலோகம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

குறிப்பாக பேரணி வரும் பகுதியிலும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலளார்கள் நினைவுத் தூபியில் இந்த சுவரொட்டிகள் தமிழ் எழுத்துப் பிழைகளுடன் ஒட்டப்பட்டுள்ளன.

இதன்மூலம் குறித்த போராட்டத்தினை நடாத்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு தலைவிக்கும் ஊடகவியலளார்களுக்கும் அச்சுறுத்தும் செயற்பாடாகயிருக்கலாம் எனவும் இவ்வாறாக செயற்பாடுகளை உரியவர்கள் கைவிட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

அரச புலனாய்வுத்துறையின் அச்சுறுத்தும் வகையான செயற்பாடாகவே இவற்றினை நோக்க முடியும் எனவும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.