சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகிறார்

315 0

சீன பாதுகாப்பு அமைச்சர் சாங் சங்கூவன் 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார்.

இலங்கை வரும் அவருடன் 19 பிரதிநிதிகளும் வருகை தருகின்றனர்.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் நோபாளம் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்தநிலையில், இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உயர் அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார்.

இது தவிர இலங்கை சீனாவுக்கு இடையிலான பாதுகாப்பு வலயம் குறித்து இரு தரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் சீன மக்கள் விடுதலை இராணுவத்தில் ஜென்ரல் பதவியை வகிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.