கிண்ணியாவில் டெங்கு நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையிலான கலந்துரையாடல் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், சுகாதார பிரதிமைச்சர் பைசல் காசிம், மாகாண சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நசீர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்,எஸ்தௌபீக் மாகாண சபை உறுப்பினர்களான அன்வர் மற்றும் லாஹிர் ஆகியோர் பங்குபற்றினர்.
திருகோணமலை அரசாங்க அதிபர், திருகோணமலை, முப்படைகளின் தளபதிகள், வைத்திய உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்,
இதன்போது வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை உடன் நிவர்த்திக்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்தார்.
இதேவேளை கிண்ணியா தள வைத்தியசாலைக்கு நேரில் விஜயம் செய்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உட்பட குழுவினர் அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் அங்குள்ள குறைபாடுகளையும் கண்டறிந்தார்.


