யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி முதியவர் உயிரிழப்பு

137 0
குளவிக் கொட்டுக்கு இலக்காகி இன்று (27) அதிகாலை 1 மணியளவில் முதியவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்றைய தினம் (26) காலை 7.45 மணிக்கு தேவாலயத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது பனை மரத்தில் இருந்து கீழே விழுந்த குளவிக்கூட்டில் இருந்த குளவிகள் அவரை கொட்டியுள்ளது.

அதனையடுத்து, அவர் மிருசுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு 11 மணியளவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தவசிக்குளம், மிருசுவில் பகுதியைச் சேர்ந்த இமானுவேல் ஜேசுரட்ணம் (வயது 79) என்கிற 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.