முல்லைத்தீவு – பாலிநகரில் வர்த்தகநிலையம் தீக்கிரை

137 0

முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில்  இன்று சனிக்கிழமை (26)  அதிகாலை கடையொன்று தீக்கிரையாகியுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த துரைராசா வசீகரன் என்பவருடைய ‘வசி ஸ்டோஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த கடையே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

இது தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனைகளை மேற்கொண்டனர். எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை.

குறித்த தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.