சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கு உடனடியாக நடவடிக்கை எடுங்கள்!

66 0

நாட்டில் வைத்தியசாலைகளில் மயக்க மருந்துக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக. வைத்தியசாலை கட்டமைப்பில் சத்திர சிகிச்சைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25)  விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொட்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் வைத்தியசாலைகளில் மயக்க மருந்துக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இது மக்களின் உயிராேடு தொடர்பான பிரச்சினையாகும். சுகாதார அமைச்சரிடம் இது தொடர்பாக கேள்விகளை கேட்டால், அதற்கு பதிலளிக்க கால அவகாசம் தேவை என தெரிவிக்கிறார்.

சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக நோயுற்றிருக்கும் மக்களுக்கும் காத்துக்கொண்டிருக்க முடியாது.

அதனால் மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதை தடுப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன என கேட்கிறோம்.

அதேபோன்று நாட்டில் பல மதஸ்தலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மதஸ்தலங்களின் மின்சாரத்தை துண்டித்துவிடுவது பொருத்தமான விடயமல்ல. அரசியலமைப்பில் பெளத்த மதத்திற்கு உயர்ந்த இடம் வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோன்று ஏனைய மதங்களுக்கும் வழங்கப்படவேண்டிய இடம் வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் மதஸ்தானங்களில் மின்சாரம் துண்டிக்கும் நடவடிக்கையை கைவிட்டு அதற்காக வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளவேண்டும்.

அதேபோன்று மதஸ்தலங்களின் மின்சாரம் தூடிக்க்கும் முறையை கைவிட்டு, மாற்று நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.