கிளிநொச்சியில் சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள கண்டனப்போராட்டம் ஒன்றை நடத்த முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டமானது வெள்ளிக்கிழமை (25) காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை கிளிநொச்சி நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதாவது நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடந்த 22 ஆம் திகதி நாடாளுமன்றில் முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் நாடாளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்தும் இந்த எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

