தொற்றுநோய் வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம இதனை தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைக்கு சென்றவர்கள் கைதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருந்தால் சி;றையிலிருந்து பக்டீரீயா சமூகத்திற்குள் பரவுவதற்கான வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் பக்டீரீயா சமூகத்திற்குள் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய்கள் தொடர்பிலான பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி விஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கைதிகளுக்கும் சிறைச்சாலைபணியாளர்களுக்கும் உரிய மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன இந்த நோய்க்கான முக்கிய காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சமீபத்தில் சிறைச்சாலைக்கு சென்றுவந்த வெளிநபர்களை கண்டுபிடிக்குமாறு மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை தற்போதைய நிலை காரணமாக காலிச்சிறைச்சாலையில் சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

