மாத்தளை ரத்தோட்ட தோட்டத்தில் இடம்பெற்ற சம்வம் தொடர்பாக அரசாங்கம் முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் இது தொடர்பாகவும் விசாரணை இடம்பெறும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மாத்தளை ரத்வத்தை தோட்டத்தில் அரச காணியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வீட்டை உடைத்து நொருக்கிய சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி மலைய தமிழ் எம்.பிக்கள் நீதி கோரி சபையில் போராட்டம் மேற்கொண்டிருந்த நிலையில் அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரான ரமேஷ் பத்திரண சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் தெரிவித்து, குறித்த சம்பவம் தொடர்பில் வருத்தத்தையும் தெரிவித்தார்.
அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அது தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் சபையில் குறிப்பிட்டார்.
மேற்படி சம்பவத்துடன் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
சபாநாயகர் கூறுவது போல் நாட்டின் பல இடங்களிலும் அதிகாரிகளின் இது போன்ற முறையற்ற வகையில் செயல்படுவதால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அதனை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் செய்ய முற்படக் கூடாது. அது தவறு.
அத்துடன் மாத்தளை ரத்தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவ இடத்திற்கு சென்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருந்தார். இது எதிர்க்கட்சியினருக்கு பொறுக்கவில்லை என்றார்.

