கூட்டு எதிர்க் கட்சியின் முதலாவது எதிர்ப்புக் கூட்டம் இன்று இரத்தினபுரியில்

234 0

உள்ளுராட்சி சபைத் தேர்தலை இன்னும் தாமதிக்காமல் நடாத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, கூட்டு எதிர்க் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளின், முதலாவது கூட்டம் இன்று (18) இரத்தினபுரியில் நடைபெறுகின்றது.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு அடுத்து வரும் மே மாதம் 19 ஆம் திகதியுடன், 2 வருடங்கள் நிறைவடையவுள்ளன. அரசாங்கம் தேர்தலை நடாத்தாமல் தொடர்ந்தும் காலதாமதப்படுத்தி வருவதாக கூட்டு எதிர்க் கட்சி குற்றம்சாட்டி வருகின்றது.

இதற்காக வேண்டி நாடுமுழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகள் அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதன் ஒரு அங்கமாக இன்று முதலாவது கூட்டம் இரத்தினபுரியில் இடம்பெறுகின்றது.

இதன் இரண்டாவது எதிர்ப்புக் கூட்டம் மாத்தறையில் நடாத்த தீர்மானித்துள்ளது. இன்றைய கூட்டத்தில் கூட்டு எதிர்க் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்