ஏஞ்சலா மேர்க்கல் , டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார்

237 0
ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார்.
தற்போது அவர் வொசிங்டனில் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு இடையிலான இந்த பேச்சுவார்த்தையின் போது நேட்டோ தொடர்பு மற்றும் அட்லான்டிக் வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் இருந்து இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மகிழுந்துகளுக்கு அதிக வரி அறவிடப்படும் என்று முன்னர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் ஏஞ்சலா மேர்க்கலுடன் ஜேர்மனியின் முக்கிய வர்த்தகவர்களின் பிரதிநிதிகளும் உடன்சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது