இலங்கைத் தமிழருக்காக 116 கோடி

280 0

தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, அகதிகளின் நலனுக்காக 116 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் 2017-18ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிச்சாமி அரசின் சார்பில் தாக்கல்செய்யப்படும் முதலாவது வரவு செலவு திட்டம் இதுவாகும்.

இந்த வரவு செலவு திட்ட உரையாற்றிய ஜெயகுமார், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனுக்காக 116 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.