தமிழ்மாணி. திருமதி . தர்மினி யசிந்தா கருணாநிதி அவர்களுக்கு இதயவணக்கம்.

468 0

தமிழ்மாணி திருமதி . தர்மினி யசிந்தா கருணாநிதி
பிறப்பிடம்:- யாழ்ப்பாணம் – தமிழீழம்
வதிவிடம்:-பாட்பிறிக்றிக்சால் – யேர்மனி

கல்வி என்ற சக்தி அறிவுக் கண்ணைத் திறக்கும் திறவுகோலாகும். கல்வியைப் புகட்டுகின்ற ஆசான்கள், அறிவின் வழிகாட்டும் ஒளியாக போற்றி வணங்கும் உயரிய நிலையில் உள்ள பிறவியாகப் போற்றப்படுவர். அதிலும் தாய்மொழிக் கல்வி, பெற்ற தாயையும், பிறந்த மண்ணையும் உயிராக மதித்து வாழும் நிலையை உணர்த்தும் உயர்வாக கருத்தப்படுகின்றது. இத்தகைய தாய்மொழிக் கல்வியை புலம்பெயர்ந்த மண்ணில் “தமிழ்க் கல்விக் கழகம்” மூலம் தமிழாலயங்களில் கற்பித்து வருவது எமது சிறார்கள் தாய்மொழியையும், பண்பாட்டையும் மனதில் நிறுத்தி தமிழராய் வாழவேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகும்.

இத்தகைய மேன்மை மிக்க தாய்மொழிக் கல்விப் பணியை கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக கற்றுத்தந்து, எமது தமிழ்க் கல்விக் கழகத்தின் உயரிய விருதான “தமிழ்மாணி” விருதைப் பெற்று, சிறந்த பணியாற்றி நம்மிடையே வாழ்ந்த ஆசிரியையான அமரர்.தமிழ்மாணி திருமதி.தர்மினி.யசிந்தா கருணாநிதி அவர்களை இழந்து நிற்கின்றோம். மாணவர்களிடத்தில் அன்பும், சக ஆசிரியைகளிடம் பண்பும் கொண்டு நேர்மையான ஆசிரியையாக திகழ்ந்தவர் என்றால்
அது மிகையாகாது.

தாயகஉணர்வும், தாய்மொழிப்பற்றும், நிறைந்த அமரர்.தமிழ்மாணி. திருமதி.தர்மினி யசிந்தா கருணாநிதி அவர்களை இழந்து வாடும் கணவர், பிள்ளைகள், உற்றார் உறவினர்,நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்து கொள்கின்றோம். அன்னாரின் ஆன்மா இயற்கையின் சக்தியோடு சேர்ந்து அமைதி பெற வேண்டுகின்றோம்.

தாய்மொழியைப் போற்றி தரணியில் வாழ்ந்தோர்
தாய்மையின் உருவாய் போற்றப்படுவர்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.