கருணாவுடன் கை கோர்த்த கோத்தாபாய

242 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுள்ளது. கூட்டமைப்பு சட்டவிரோதமானது என்றால் அப்போதே அதன் உறுப்பினர்களை கைது செய்திருக்கலாம்.

அத்துடன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தனக்கு தேவையான நேரத்தில் விடுதலைப் புலிகளை தாலாட்டினார். முன்னாள் பிரதியமைச்சர் கருணாவையும் தன்னுடன் இணைத்துக்கொண்டார் என பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா இதனை தெரிவித்துள்ளார்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளரக்ள சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறியுள்ளார்.2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

அந்த தீர்மானத்தில் கலப்பு நீதிமன்ற விசாரணைப்பொறிமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின், கலப்பு நீதிமன்ற யோசனையை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா..?

கலப்பு நீதிமன்ற முறையினை வலியுறுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சர்வதேச அமைப்புகள் அழுத்தம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறான குழுக்கள் இருக்கின்றனவா..? என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.இதற்கு பதிலளித்து பேசிய பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா, அவ்வாறான குழுக்கள் ஒன்று, இரண்டு அல்ல. நிறையவே இருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களுடன் இணைந்து செயற்படுகின்றது.

ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு என்று தனித்துவமான கொள்கைகள் இருக்கின்றன. கூட்டமைப்பு கூறும் அனைத்து விடயங்களையும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த முடியாது.கூட்டமைப்பின் ஏற்றுக்கொள்ள கூடிய விடயங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும்.

இதேவேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அமெரிக்க பிரஜையாவார். தனக்கு தேவையான நேரத்தில் விடுதலைப் புலிகளை தாலாட்டவும் செய்வார் அதேநேரத்தில் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவையும் கைகோர்த்துக்கொள்வார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த அரசாங்க காலத்திலும் செயற்பட்டு வந்துள்ளது. கூட்டமைப்பு சட்டவிரோதமானது என்றால் அப்போதே அதன் உறுப்பினர்களை கைது செய்திருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.