இந்திய உயர்ஸ்தானிகருடைய சந்திப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும்

65 0

இந்திய உயர்தானிகருடைய சந்திப்பு பயனுள்ளதாக அமையவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேகேக்கும் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும்  இடையிலான சந்திப்பு தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேகேக்கும் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும்  இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பு எத்தகைய விடையம் கலந்துரையாடப்படும் என்பதை ஊகிக்கக்கூடியதாக இருந்தாலும் இந்திய உயர் ஸ்தானிகருடனான சந்திப்பு பயனள்ளதாக இருக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாகவுக்கான விஜயத்தை பூர்த்தி செய்ததன் பின்னணியில் இச் சந்திப்பு நடைபெறவுள்ளது எனினும் தமிழ்க் கட்சிப் பிரதிநிதிககளுக்கம் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பானது கடந்த இரண்டு மூன்று தடவைகள் இடம்பெற்றிருந்த போதும் அது முறையானதாக இல்லாது முரண்பாடுகள் உடையதாகவே காணப்பட்டுள்ளது.

குறிப்பாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ்க்கட்சிகள் அதனைத் தீர்வாக ஏற்றுக்கொள்ளாத போதிலும் அதையாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையே வலியுறுத்தி வந்தோம் கடந்த 36 வருட காலமாக இதனைக்கோரி வந்தபோதும் ஒரு சில மாதங்கள் வாரங்களில் இதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறிகுறித்த 13 திருத்தச் சட்டத்திலுள்ள பொலிஸ் அதிகாரத்தை நீக்கிவிட்டு நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் சில கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

அதுமட்டுமன்றி 13 ஆம் திருத்தச் சட்டத்திலுள்ள பொலிஸ் அதிகாரத்தை ரத்துச் செய்கின்ற தனிநபர் பிரேரணையை பாரளுமன்றத்தில் கொண்டு வரப்போவதாகவும் அறிவிப்புக்கள் வெளிவந்துள்ளது. இவ்வாறான சூழலில் ஜனாதிபதியோ அரசியல் அதிகாரப் பகிர்வு வேண்டுமே தேர்தல் வேண்டுமே என்ற சாரப்படலான கேள்விகளை தமிழ்க் கட்சிகளுடனான சந்திப்பில் முன்வைத்துள்ளார்.

அடுத்துவருகின்ற காலங்களில் ஜனாதிபதியுடன் தமிழ்க்கட்சிகள் சந்திப்பதா சந்திப்பதனால் பலன் உண்டா என்பதில் கேள்விக்குறிகள் உள்ள நிலையில் இந்தியத் தூதுவருடனான சந்திப்பு நடைபெறுவள்ளது. இச் சந்திப்பில் நான் கலந்துn காள்ளாது விட்டாலும் இச் சந்திப்பில் எமது பிரதிநிதிகள் கலந்துகொண்டு முக்கிய பல விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்கள் என்றார்.