யேர்மனி முன்சன் நகரில் நடைபெற்ற கறுப்பு யூலை 40ஆண்டுகள் நினைவு நாள்-30.07.2023.

223 0

யேர்மனி முன்சன் நகரில் நடைபெற்ற கறுப்பு யூலை 40ஆண்டுகள் நினைவு நாள் 1983 யூலை 23 அன்று சிறீலங்கா இனவாத அரசின் சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூருமுகமாக 30.07.2023 ஞாயிற்றுக்கிழமை முன்சன் வாழ் தமிழ் மக்களை ஒன்றிணைத்து முன்சன் நகரில் (Karls Platz(Stachus) என்ற இடத்தில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடாத்தப்பட்டது.

தமிழினப் படுகொலையைச் சித்தரிக்கும் பதாகைகளை மக்கள் தமது கைகளில் ஏந்தியபடி பல்லின மக்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தியிருந்தனர். டொச் மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்ட அறிக்கைகள் பல்லின மக்களுக்கு வழங்கப்பட்டதுடன், அதற்கான விளக்கங்களும் டொச் மொழியில் வழங்கப்பட்டது. நிகழ்வு தொடங்கியதிலிருந்து 1983 யூலை 23 இல் எமது மக்களுக்கு நடைபெற்ற கொடுமைகளை டொச் மொழியில் எமது இளையவர்கள் ஒலிபெருக்கியில் வழங்கிய வண்ணமிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

16:00 மணிக்குத் தொடங்கிய நிகழ்வு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கைப் பாடலோடு 18:00 மணிக்கு நிறைவுற்றது.