கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரை சுரங்க வழித்தடத்தில் விரைவில் மெட்ரோ சேவை

241 0

தமிழக அரசின் 2017-18 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பின் வருமாறு:-

நெடுஞ்சாலைத் துறை:-

* 115 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகளும், 107 மாவட்ட முக்கிய சாலைகள் ரூ.160   கோடி செலவில் அகலப்படுத்தப்படும்
* சாலை பாதுகாப்புக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
* நான்கு வழி சாலைகளை 6 வழி சாலைகளாக மாற்ற ரூ.232 கோடி ஒதுக்கீடு
* நான்கு வழி சாலைகளை தரம் உயர்த்த ரூ.1,508 கோடி நிதி ஒதுக்கீடு
* சென்னை புறநகர் சாலை திட்டங்களுக்கு ரூ.744 கோடி நிதி ஒதுக்கீடு
* நெடுஞ்சாலைத் துறைக்கு மொத்தம் ரூ,10,067 கோடி நிதி ஒதுக்கீடு

மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை:-

* 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்
* விவசாயம், இதர பயன்பாட்டுக்கான மின்சார மானியத்திற்கு ரூ.8,538 கோடி ஒதுக்கீடு
* தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு மேம்பாடு திட்டத்திற்கு ரூ.974 கோடி நிதி ஒதுக்கீடு
* தமிழக மின் உற்பத்தி திட்டங்களில் காற்றாலை, சூரிய ஆற்றலின் பங்கு அதிகரித்து வருகிறது
* உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்ததால் ரூ.1,335 கோடி ரூபாய் சேமிப்பு ஏற்படும்
* புனல் மின் நிலையங்கள் மூலம் நிதி திரட்ட புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
* எரிசத்தி துறைக்கு ரூ.16,998 கோடி நிதி ஒதுக்கீடு
* நீர்வள ஆதாரங்கள் துறைக்கு மொத்தம் ரூ.4,500 கோடி ஒதுக்கீடு

போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை:-

* 107.5 கி.மீ தொலைவுக்கு 3 புதிய மெட்ரோ வழித்தடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும்
* கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரை சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை விரைவில் தொடங்கப்படும்
* மெட்ரோ ரெயில் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வரை    விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
* போக்குவரத்துக்கு துறைக்கு மொத்தம் ரூ.2,192 கோடி ஒதுக்கீடு
* வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறநிலையத்துறை:-

* தகவல்- தொழில்நுட்பத்துறைக்கு ரூ.116 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கிராம கோயில்கள் தலா ரூ.1 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும்
* கிராம கோயில்களை புதுப்பிக்கும் திட்டத்தில் கோயில்களின் எண்ணிக்கை 500 லிருந்து 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* சுரேசி தர்சன் திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.