முத்துராஜா யானையை உரிய முறையில் பராமரிக்கவில்லை!

149 0
யானைகளுக்குப் புகழ் பெற்ற இலங்கை, தாய்லாந்தின் நன்கொடையாகப் பெற்ற முத்துராஜா யானையை உரிய முறையில் பராமரிக்க இயலாத நிலைமை ஏற்பட்டது.

குறித்த சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தின் மூலம் இலங்கைக்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக மேற்படி குழுவின் தலைவரான கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அஜித் மன்னப்பெரும சுட்டிக்காட்டினார்.

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் விலங்கியல் திணைக்களம் மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் வருடாந்த அறிக்கைகளை பரிசீலிப்பதற்காக கடந்த (18) நாடாளுமன்றத்தில் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான நாடாளுமன்ற  மேற்பார்வைக் குழு கூடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.