கொழும்பு, வாழைத்தோட்டத்தில் துப்பாக்கிப் பிரயோகம்

140 0

கொழும்பு வாழைத்தோட்டம் மார்டிஸ் லேன் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் உயிரிழந்த நபர் தொடர்பில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ரவிந்த டில்ஷான் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபர், வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தனுகவின் சகா என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் சில நண்பர்களுடன் உணவு உண்பதற்காக ஹோட்டலுக்கு முன்னால் காத்திருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் இளைஞர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.