போதைப்பொருள் கடத்தலுக்காக சிங்கப்பூர் பல வருடங்களின் பின்னர் பெண்ஒருவருக்கு தூக்குதண்டனையை நிறைவேற்றியுள்ளது.
இரண்டுதசாப்தங்களிற்கு பின்னர் பெண் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை மனித உரிமை ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.
சங்கி சிறைச்சாலையில் சரிதேவி ஜமானி என்ற 45 வயது பெண்ணிற்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் பணியகம் அறிவித்துள்ளது.
31கிராம் ஹெரோய்ன் வைத்திருந்தமைக்காக குறிப்பிட்ட பெண்ணிற்கு 2018 இல் தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.
அவருக்கு சட்டத்தின் கீழ் முழுமையான உரிமைகள் வழங்கப்பட்டன அவரின்சார்பில்சட்டத்தரணியொருவர் ஆஜராகினார் என தெரிவித்துள்ள மத்திய போதைப்பொருள் பணியகம் 15கிராமிற்கு மேல் ஹெரோய்ன் வைத்திருந்தால் மரணதண்டனை விதிப்பதற்கு சட்டம் அனுமதித்துள்ளதாகவும்குறிப்பிட்டுள்ளது.
2004 இல் 36 வயது பெண்ணொருவருக்கு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிங்கப்பூர் தூக்குதண்டனையை நிறைவேற்றியிருந்தது.
போதைப்பொருள்குற்றங்களுக்கு எதிரான மிகவும் கடுமையான சட்டங்களை சிங்கப்பூர் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி வருகி;ன்றது போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு மரணதண்டனை அவசியம் என சிங்கப்பூர் தெரிவித்துவருகின்றது.
சிலவகையான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களிற்கு மரணதண்டனைகட்டாயம் என சிங்கப்பூர் சட்டங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் மரணதண்டனையை நிறைவேற்றுவதை மீண்டும் ஆரம்பித்த பின்னர் வெளிநாட்டவர்கள் – மாற்றுத்திறனாளிகள் உட்பட 15 பேருக்கு சிங்கப்பூர் தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

