யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (27) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு நான் கொண்டு வந்தேன்.
அதனைத் தொடர்ந்து அவர் குறித்த அகழ்வு பணிகளுக்கு நிதி ஒதுக்குவதாக தெரிவித்தார்.
மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகளில் இலங்கை தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டால் அது பக்கசார்பானதாக அமையும் என தமிழ் மக்கள் நம்புகிறார்கள். எனவே, ஐ.நா அனுசரணையில் இதனை முன்னெடுக்க வேண்டும் எனவும் நான் வலியுறுத்தினேன்.
எனது கோரிக்கை தொடர்பில் அவர் பதிலளிக்கவில்லை எனினும் குறித்த அகழ்வு பணிகளுக்கு நிதி ஒதுக்குவதாக தெரிவித்தார்.
இதன் போது அகழ்வு பணி தொடர்பில் முறையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என தான் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணிக்கு நிதி ஒதுக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.