அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு பிணை

56 0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 37 பேர் கடுமையான பிணை நிபந்தனையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பொலனறுவை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் அரசாங்கத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் இடம்பெற்றன.

இந்த நிலையில் அமரகீர்த்தி அத்துகோரள அலரிமாளிகைக்கு வருகை தந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நிட்டம்புவ நகரில் வைத்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் பிரத்தியேக பாதுகாப்பு காவல் துறை உத்தியோகத்தர் ஒருவரும் குறித்த சந்தர்ப்பத்தில் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.