திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சமிந்த ஹெட்டியாரச்சி நியமனம்..!

184 0
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவையின் விசேட தர சேவையை சேர்ந்த சமிந்த ஹெட்டியாரச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வியாழக்கிழமை (27) மாவட்ட செயலகத்தில் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பார்.

மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய பி. எச்.என்.ஜயவிக்ரம ஓய்வு பெற்றதனை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிருவாக சேவை திறந்த பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட இவர் 2000 -2006 ஆம் ஆண்டு வரை திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் உதவி செயலாளர், சிரேஸ்ட்ட உதவி செயலாளர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.