இளம் குடும்பஸ்தர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – நாவலடி எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மனைவி வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் அண்மைக் காலமாக தொலைபேசி உரையாடல் மூலம் கணவன், மனைவிக்கிடையில் முரண்பாடு தோன்றியுள்ளது.
இதன் தொடரிலேயே கணவன் தனது உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு உயிரை விட்ட நபர் திருகோணமலை – கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவர் ஓட்டமாவடி – நாவலடி பகுதியில் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

