24.07.2023 அன்று பெல்சிய நாட்டில் கறுப்பு யூலை நினைவுள்.

105 0

அன்வேர்ப்பன் என்னும் மானிலத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பெல்சியக்கிளையின் ஏற்பாட்டில் 1983 ஆடி 23 அன்று தென்னிலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களின் கைகூலிகளான சிங்கள காடயர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் முகமாக கறுப்பு யூலை 40 ஆண்டு நினைவு நாள் நினைவு கூறப்பட்டது.

முதன்மை நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து இனப்படுகொலையை நினைவு கூறும் முகமாக பேச்சுக்களும் ,கவிதைகளும் மற்றும் படுகொலையை சித்தரிக்கும் வண்ணம் காட்சிப்படுத்தல் செயல்முறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இனப்படுகொலையை சித்தரிக்கும் பதாதைகள் பல்லின மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு ஆங்கிலத்திலும்,நெதர்லாந்திலும் மொழிமாற்றப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அத்துடன் இனப்படுகொலையை சித்தரிக்கின்ற வாக்கியங்கள் பொறிக்கப்பட்ட குடிநீர் போத்தல்களும் பல்லின மக்களிற்கு வழங்கப்பட்டது.

இந்நினைவு நாளில் பல மக்கள் கலந்துகொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். பி.பகல்1.மணிக்கு ஆரம்பமான கறுப்பு யூலை நினைவு நிகழ்வானது பி.பகல் 4.30 மணிக்கு எமது தாரகமந்திரத்துடன் நிறைவு பெற்றது.