சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தில் கப்பலில் தமிழர்

306 0

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட கப்பலில் உள்ள இலங்கையர்கள் 8 பேரையும் விரைவில் மீட்கும் பொருட்டு சோமாலிய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன் கமன்டோ சமிந்த வலாக்குலகே இதனை தெரிவித்தார்.
குறித்த கப்பலில் பணியாற்றிய அனைவரும் இலங்கையர்கள் என தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கப்பலின் மாலுமியான நிகலஸ் என்டனி காக்கை தீவு பிரதேசத்தை சேர்த்தவர் எனவும் நீர்கொழும்பு ஏ சண்முகம், மதுகம ருவான் சம்பத், காலி திலிப்ப ரனவீர, கந்தானை சுனில் பெரேரா, அகுரஸ்ஸ லஹிரு இந்துனில், ஹொரனை ஜயந்த களுபோவில மற்றும் தெவிநுவர ஜனக்க சமேந்திர ஆகியோரே கடந்தப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.

ஜிபுடியில் இருந்து சோமாலியாவின் மோஹடிஸ் தீவுக்கு எண்ணெய் கொண்டு சென்ற வேளையிலேயே குறித்த கப்பல் நேற்று முன்தினம் கடத்தப்பட்டது.

இந்த கப்பலை கடந்திய குழு தொடர்பில் இது வரை தெளிவான தகவல் இல்லை என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கப்பலை விடுதலை செய்ய சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய கடற்படையின் அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

எனினும், கப்பத் தொகை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.