ஆபிரிக்க நாடான கெமரூனில் கட்டடமொன்று இடிந்ததால் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
தூவாலா நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடமொன்று இடிந்து மற்றொரு கட்டடத்தின் மீது வீழ்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இச்சம்பவம் இடம்பெற்றள்ளது.
இச்சம்பவத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர் என பிராந்திய ஆளுநரும் மீட்புக்குழுவினரும் இன்று தெரிவித்துள்ளனர்.
துவாலா நகரில் 2016 ஆம் ஆண்டு இதே போன்ற சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு சுமார் 500 கட்டடங்கள் இடிந்துவிழுக்கூடிய ஆபத்து உள்ளதாக அவ்வருடம் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

