தேர்தல் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எவையும் வெளிவராத நிலையில், வேட்பாளராகக் கனவு காண்பதும் பிரயோசனமற்றது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டியது அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிட மாட்டார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டியது அவசியமாகும். மக்களின் விருப்பத்துக்கும் கோரிக்கைக்கும் அமையவே அனைத்தும் இடம்பெற வேண்டும்.
தேர்தல் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எவையும் வெளிவராத நிலையில், வேட்பாளராகக் கனவு காண்பதும் பிரயோசனமற்றது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சரியான தீர்மானங்கள் எடுக்கப்படும் பக்கத்திலேயே நாம் செயற்படுவோம். பொறுத்தமான நேரத்தில் பொறுத்தமான தீர்மானங்களை நாம் எடுப்போம்.
ஒரு சிலர் தமது தேவைகளை நிறைவு செய்து கொள்ளக் கூடிய சூழல் உருவாகியுள்ளதால் , நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளும் தீர்ந்து விட்டதைப் போன்று பேசுகின்றனர்.
உண்மையில் அவ்வாறு ஏதுவும் இல்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் செல்வாக்கை பெற்றிருந்தால் அவர் மீண்டும் ஜனாதிபதியாகலாம்.
இந்தியா அபிவிருத்தியில் முன்னிலையிலுள்ள நாடு என்ற போதிலும் , இந்நாட்டின் உள்நாட்டு அரசியலில் சிக்கல்கள் காணப்படுகின்றன. எனவே அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போன்று செயற்படுவதாகக் கூறி , அநாவசிய சிக்கல்களிள் மாட்டிக் கொள்ளக் கூடாது.
தற்போது எமது தேவை இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைப்பதல்ல. மாறாக மக்களுக்கு 3 வேளையும் உணவு உண்ணக் கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

