விடுதலைப் புலிகளுக்கு நிதித்திரட்டியவர்கள் சார்பான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது

228 0

தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நிதித்திரட்டியவர்களை, பயங்கரவாத சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தக் கூடாது என்று வாதாடப்பட்ட வழக்கு ஒன்றை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நெதர்லாந்தைச் சேர்ந்த நான்கு ஈழத் தமிழர்கள் இந்த வழக்கினை தொடர்ந்திருந்தனர்.

விடுதலைப் புலிகளுக்காக நிதித் திரட்டியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்களது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் அன்றி, தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் நடத்தக் கூடாது என்று அவர்கள் தரப்பில் வாதாடப்பட்டது.

எனினும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.