அமைதியான முறையில் நினைவுகூருவதற்கான உரிமை மிகவும் முக்கியம் – சுவிட்சர்லாந்து தூதுவர்

175 0
கடந்காலங்களை  கையாள்வதற்கும் ஐக்கிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் அமைதியான முறையில் நினைவுகூருவதற்கான உரிமை மிகவும் முக்கியமானது என இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமனிக் பேர்க்லெர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று கறுப்பு ஜூலையின் நாற்பதாவது வருடத்தை நினைவுகூற முயன்றவர்களை பொலிஸார் பலப்பிரயோகம் செய்து அகற்றியதை காண்பிக்கும் படத்தை பதிவு செய்து அவர் டுவிட்டரில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்

சுவிஸ் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

40வருடங்களிற்கு முன்னர் கறுப்புஜுலையில்  இழக்கப்பட்ட அனைத்து உயிர்களையும் நாங்கள் நினைவுகூறுகின்றோம்.

கடந்காலங்களை  கையாள்வதற்கும் ஐக்கிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் அமைதியான முறையில் நினைவுகூருவதற்கான உரிமை மிகவும் முக்கியமானது.

அனைத்து இலங்கையர்களுக்குமான அமைதி நீதி நல்லிணக்கத்திற்கு சுவிட்சர்லாந்து தொடர்ந்தும் ஆதரவளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.