அக்குரஸ்ஸவில் மரம் வீழ்ந்ததில் இருவர் பலி, மூவர் காயம்

135 0
அக்குரஸ்ஸ அமலகொட சந்தியில் பாரிய மரமொன்று வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனம் பழுதுபார்ப்பதற்காக வந்தவர்களே இவ்வாறு மரம் வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளனர்.

அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக குறித்த மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.