மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு 42மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

142 0

மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு 42மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 66வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் காலை முதல் மாலை 5மணி இடம்பெற்றது. விவாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் குறித்த விவாதத்தை மேலும் ஒரு தினத்தில் விவாதித்து விட்டு வாக்கெடுப்புக்கு செல்லவேண்டும்.

சட்டமூலம் தொடர்பாக உறுப்பினர்களுக்கு தங்களின் கருத்துக்களை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திடம் கோரி வந்தன. என்றாலும் குறித்த சட்டமூலம் நாட்டுக்கு முக்கியமானது. அதனால் காலம் தாழ்த்த முடியாது என தெரிவித்து அரச தரப்பு அதற்கு அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் விவாதத்தில் உரையாற்று எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு போதுமான நேரம் கிடைக்காத காரணத்தால் விவாதம் இடம்பெறும்போது இரண்டு தடவைகள் சபையில் போதுமான கூட்ட நடப்பெண் இல்லை என தெரிவித்து, கோரத்தை கோரி வந்தனர். இருந்தபோது ஆளும் கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் செயற்குழு கூட்டங்களில் இருந்து சபைக்கு வந்து கூட்ட நடப்பெண்ணை உறுதிசெய்து விட்டு தொடர்ந்து விவாதத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இறுதியில் விவாதம் மாலை 5மணியளவில் முடிவுக்கு வந்தபோது, மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டுக்கு சபையின் அனுமதியை, சபைக்கு தலைமைதாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் கோரியபோது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித் ஹேரத் வாக்கெடுப்பை கோரினார். அதனைத்தொடர்ந்து இலத்திரணியல் முறையில் வாக்கெடுப்ப இடம்பெற்றது.

அதனடிப்படையில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 66 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளதாக . பிரதி சபாநாய சபைக்கு அறிவித்து,  செயற்குழுவில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அறித்தார்.

அதன் பின்னர் செயற்குழுவில் சட்டமூலத்தில்  திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், மீண்டும் பாராளுமன்றம் கூடி, மத்திய வங்கி சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்ற சபையின் அனுமதியை போரிய நிலையில் சபையின் அனுமதியுடன் மத்திய வங்கி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக சபைக்கு அறிவித்தார்.

வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வாக்களித்தனர். சட்டமூலத்துக்கு  எதிராக  ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் விமல் வீரவன்ச அணியை சேர்ந்த உறுப்பினர்களும், பொதுஜன பெரமுனவின் சுயாதீன அணியை சேர்ந்தவர்களும் வாக்களித்தனர்.

எனினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை. இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ் உள்ளிட்ட 134 பேர் வாக்களிப்பின் போது சபையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.