பாகிஸ்தானில் மதிலொன்று இடிந்ததால் 11 பேர் பலி

143 0
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் மதிலொன்று இடிந்து வீழ்ந்ததால் குறைந்தபட்சம் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

 இஸ்லாமாபாத்தின் பெஷாவர் வீதியில்  புதன்கிழமை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இஸ்லாமாபாத், ராவல்பிண்டி பிரதேசங்களில் கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மதிலொன்று இடிந்த நிலையில், இடிபாடுகளிலிருந்து 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்து;ளளர்ர.

இச்சம்பவத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்னர் எனவும்  சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.