முடி திருத்துனரின் தொழிலை தன் கையில் எடுத்த ஆசிரியர்

142 0
தலைமுடியை சீராக வெட்டாததன் காரணமாக ஆசிரியர் ஒருவர், முடி திருத்துனரின் தொழிலை தன் கையில் எடுத்து, மாணவர்களுக்கு முடியை வெட்டியுள்ளார். முறையாக வெட்டாமல் தலைமுடியை குதறிவிட்டார்.

இந்த சம்பவம் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தமிழ் வித்தியாலயத்திலே​யே இடம்பெற்றுள்ளது.

மாணவர்களின் தலை அலங்கோலமாயுள்ளது.  இதனால் மாணவர்கள் இனி பாடசாலை செல்ல முடியாது என அழுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.